மோடியின் கோரிக்கையாலேயே 251 மீனவா்களும், படகுகளும் விடுதலை


பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டமையை தொடர்ந்தே 251 மீனவா்களும், அவா்களது படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளது என  இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவா்கள் விடயம் தொடர்பில் இந்திய நாடாளுமன்றில் எழுப்பட்ட கேள்வி ஒன்றிற்கே சுஷ்மா சுவராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள்  நுழைந்து தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை பயன்படுத்தி தொழில் நடவடிக்கைகளில்  ஈடுப்படும் போது இலங்கை கடற்படையினரால் நூற்றுக்கணக்கான இந்திய மீனவா்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனா்.

அத்தோடு அவா்களின்  றோலர் படகுகள் உள்ளிட்ட தொழில் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. கடந்த காலங்களில்  பரஸ்பரம் மன்னிப்பு வழங்கப்பட்டு மீனவா்கள் விடுதலை செய்யப்படும் போது  அவார்களது படகுகள் விடுவிக்கப்படாது மீனவா்கள் மாத்திரமே விடுதலை செய்யப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில் மோடியின் வருகையின் பின்னா் இறுதியாக விடுதலை செய்யப்பட்ட 251 மீனவா்களுடன் அவா்களுது படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. இது மோடி கேட்டுக்கொண்டமைக்கு அமைவாகவே விடுவிக்கப்பட்டது என்கிறாா் சுஷ்மா சுவராஜ்.

ஆனால்  படகுகள் விடுவிக்கப்பட்டமைக்கு  இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் மீனவா்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு வெளிவந்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு