சமஸ்டி, சுயாட்சி அற்ற ஒற்றையாட்சியே தீர்வாக வரும் எதிர்வு கூறுகின்றாா் சீவி


தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் புறக்கணிக்கப்பட்டு அவா்களின் விருப்பத்திற்கு மாறான ஒற்றையாட்சியே தீர்வாக வரவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எதிர்வு கூறியுள்ளாா்.

புதிதாக வரவுள்ள  அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வாக  வடக்கு கிழக்கு இணைப்பு, சமஸ்டி, சுயாட்சி என்பன இடம்பெற வாய்ப்புக்கள் இல்லை எனவும். மீண்டும் தமிழ் மக்கள் மீது ஒற்றையாட்சி திணிக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்த முதலமைச்சர்

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக  தான் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிந்திருக்கவில்லை என்றும் ஆனால் இது தொடர்பில் பேசப்படும் விடயங்களை வைத்து தான்  அறிந்திருப்பதாகவும் குறிப்பிட்டாா்.

சமஸ்டி இல்லாது ஒற்றையாட்சி முறைமையே மீண்டும் கொண்டு வரப்படுமானால் தமிழ் மக்களின் தனித்துவங்கள் முழுமைாயக அழிக்கப்படும். இன்னும் 20,25 வருடங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மூலம் தமிழ் மக்களின்  தனித்துவ அடையாளங்கள் அழிக்கப்படும் அபாயம் இருக்கிறது எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தாா்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு