பூஜித ஜயசுந்தரவின் பணிப்பில் இறுக்கமடைக்கிறது யாழ் பாதுகாப்பு


 

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரில் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு  பலப்படுத்தக்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

யாழ்ப்பாணம் பிரதேசத்தின் சிவில் பாதுகாப்பு முறையை  இறுக்கமான நடைமுறைக்குள் கொண்டுவருவதற்கும் பொலீஸ் திணைக்களம் ஆராய்ந்து வருகிறது எனவும்  குறிப்பிட்ட அவா்

கடந்த தினங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து அங்கு பாதுகாப்பை வலுப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி சிவில் பாதுகாப்பு சம்பந்தமாக அதிக அவதானம் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் எந்தவொரு அவசர நிலமையின் போதும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயார் நிலையில் இருப்பதாகவும்

அதேவேளை யாழ்ப்பாணத்தில் தற்போதிருக்கின்ற நிலமை சம்பந்தமாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினால் தகவல்களைப் பெற்றுக் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு