அம்மாச்சிக்கு பக்கத்தில் அம்மே எனவும் போடுங்கள்


வடக்கு மாகாணத்தில் மாகாண சபையால் அமைக்கப்பட்டுள்ள அம்மாச்சி   பாரம்பரிய உணவகங்களின் பெயர் பலகையினை தனியே தமிழில் மட்டும் போடாது அம்மாச்சிக்கு அருக்கில் அம்மே எனவும் எழுதுங்கள் வட மாகாண முதலமைச்சரிடம் மத்திய அரசு கேட்டுள்ளதாக முதலமை்சசர் தெரிவித்துள்ளாா்.

வட மாகாணத்தில் உணவகங்களை அமைப்பதற்கு மத்திய அரசு ஒரு  தொகை நிதியை வழங்குகிறது. அந்நிதியை கொண்டு அமைக்கப்படும் உணவகங்களுக்கு  சிங்களத்திலும் பெயர் வைக்கும் படி  மத்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் இந்தக் கோரிக்கையை நான் நிராகரித்து விட்டேன்.

எங்களுக்கு உதவி செய்வதாக கூறிக்கொண்டு எங்களுடைய மண்ணில் சிங்கள் மொழியை திணிக்கும் முயற்சியை எடுக்கின்றீர்கள் என அவா்களிடம் வெளிப்படையாகவே கூறிவிட்டேன் என்றாா்

தற்போது கிளிநொச்சி,முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில்  பாரம்பரிய உணவகமான அம்மாச்சி இயங்கி வருகிறது விரைவில் யாழ்ப்பாணம் , மன்னார் மாவட்டங்களிலும் செயற்படும். எனவும் முதலமைச்சர் தெரிவித்தாா்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு