வித்தியா கொலை வழக்கு ஆறு சந்தேக நபா்களின் மரபணுக்கள் ஒத்துப்போகவில்லை ஜின்ரெக் நிறுவன விஞ்ஞானி


புங்குடுதீவு மாணவி வித்தியாக கொலை வழக்கில்  பெறப்பட்ட சான்றுப்பொருட்களின்  அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையின் போது ஆறு சந்தேகநபா்களின்  மரபணுக்கள் ஒத்துப்போகவில்லை என  மரபணு சோதனை ஆய்வு நிறுவனமான ஜின் ரெக் நிறுவனத்தின் விஞ்ஞானி ருவான் இளையபெரும ட்ரயல் அட்பார் நீதிமன்றில்  சாட்சியமளித்துள்ளாா்.

தொடர் வழக்கு விசாரணையின் பதினொறாவது நாளான நேற்று வியாழக்கிழமை  வழக்கு தொடுனர் சாட்சியாக  சாட்சியமளித்த போதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

கடந்த  15 வருட காலமாக ஜின் ரெக் நிறுவனத்தில பணியாற்றி வருகிறேன். இலங்கையில் நடைப்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் இதுவரை 4600  சம்வங்களில் மரபணு பாிசோதனை அறிக்கைகள் தயாரித்துள்ளேன்.

எமது நிறுவனத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டிருந்த 1, 1.5, 2, 5, 6 ஆகிய அளவுகளை கொண்ட மயிர் துண்டுகளும், பெண்கள் அணியும் காழாடை  ஒன்றும் காணப்பட்டன. அத்தோடு சந்தேக நபா்களின்  இரத்த மாதிரிகளும்  வித்தியாவின் தாயாரின் இரத்த மாதிரிகளும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.  எனவே இந்த பரிசோதனையின் போதே நான்காம் சந்தேக நபா் முதல்  ஒன்பதாம் சந்தேக நபா் வரையான எந்தவொரு சநதேக நபா்களினதும்  மரபணு மாதிரிகள்(DNA)  ஒத்துப்போகவில்லை.

இதேவேளை ஏனைய முதலாம், இரண்டாம், மூன்றாம்  சந்தேகநபா்கள் ஒரே  தாய் வழியைச் சேர்ந்த உறவினா்கள் என்பதும்  கண்டறியப்பட்டுள்ளது. எனவும்  ருவான் இளையபெரும தெரிவித்துள்ளாா்.

சான்றுப்பொருட்களில் காணப்படும் மரபணுக்கள் அழிவடையும் காரணங்களாக அதிக வெப்பம், அதிக குளிர் காணப்படுகிறது மேலும் காலத்தின் அடிப்படையாக கொண்டும் அழிவடைகிறது இந்த நிலையில் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள சான்றுப்பொருட்கள் உடனடியாக கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தால் ஒரு வேளை தற்போதுள்ள எமது அறிக்கையில்  மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தார்

இந்த வழக்கின் வழக்கு தொடுநர் சாட்சிகள் யாவும் நிறைவடைந்துள்ள நிலையில்  எதிரிகள் தரப்பு சாட்சிகள் பதிவு வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு