ரவி கருணாநாயக்கவை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு?


வௌிவிவகார அமைச்சர்  ரவி கருணாநாயக்கவை தனது பதவியை  இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக  சிங்கள் ஊடகமொன்று இன்று(06) செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை (03) அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளதாக  அவ்  ஊடகத்தில்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்போது, பிணைமுறி விவகாரம் தொடர்பில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் அமைச்சரவையில் பணியாற்றுவது, அரசாங்கத்துக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும் சிக்கலானதாகும். எனவே, இதற்கு சிறந்த தீர்வு பதவியை இராஜினாமா செய்வதே ஆகும் என, ஜனாதிபதி அவருக்கு அறிவித்துள்ளதாக  குறித்த ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு