விசேட அதிரடிப்படையினரால் துன்னாலை சுற்றிவளைப்பு


யாழ்ப்பாணம் , துன்னாலைப் பகுதியில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா். இன்று காலை முதல் அந்தப் பகுதியிலுள்ள வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனா்.
அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழச் சென்றவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, துன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் காவலரன் பொது மக்களால் அடித்து நொருக்கப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்காகவே இன்று காலை அந்தப் பகுதி விஷேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு