அரசியலமைப்பு தீர்வுக்கு பிரதமருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – மனோ


புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும்  நிலையில்  தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதே  பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு  நாம் செய்யும் நன்றிக்  கடனாகும் என அமைச்சர் மனோகனேசன் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாற்பது ஆண்டு  கால அரசியல் வாழ்க்கை நிறைவையொட்டி வாழ்த்துக்களை தெரிவிக்கும் பிரேரணை மீது உரையாற்றும் போதே அவா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

அவா் மேலும் தெரிவிக்கையில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாற்பது ஆண்டுகால  தனது அரசியல்  வாழ்க்கையில் பூர்த்தி செய்கின்றாா் அவருக்கு எமது கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பிலும் மக்கள் சார்பிலும்  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

விடுதலைப்புலிகளின் தோல்வி  முழு தமிழ் மக்கள் அடைந்த தோல்வியாக சித்தரிப்புக்கள் எழுந்த போது அவ்வாறான நிலைமை  ஏற்படக் கூடாது என்பதில் பிரதமர்  உறுதியுடன் இருந்தாா்   எனவும் தெரிவித்தாா்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு