மகிந்தவை பிரதமராக்கி காட்டுகிறோம் – மகிந்தானந்த சூளுரை


தேர்தலில் வெற்றியீட்டி இந்த நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைத்து, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி காட்டுவோம் என மஹிந்தானந்த அலுத்கமகே சூளுரை விடுத்தார்.  கூட்டு எதிர்க்கட்சியின் புதுக்கட்சியானசிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு அங்கத்தவர்களை சேர்த்து கொள்ளும் கூட்டம் ஒன்று கினிகத்தேனை பீடாஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

கூட்டம் முடிந்த பின், எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கயிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரனைக்குசிறிலங்கா சுதந்திர கட்சியின் 96 உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களில் அதிகமானோர் வாக்களிப்புக்கு சமூகமளிக்கப்போவதில்லை என்று எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த நம்பிக்கையில்லா பிரேரனையில் நிச்சயம் வெற்றிபெறுவதாகவும், அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், எதிர்வரும் காலத்தில் எந்த தேர்தலை நடத்தினாலும் அந்த தேர்தலில் இவ் அரசாங்கத்திற்கு எதிரான அனைவரையும் ஒன்றிணைத்து தேர்தலில் வெற்றியை அடைவோம் என்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு