விக்னேஸ்வரன்- சம்மந்தன் சந்திப்பு


வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவா் இரா. சம்மந்தனுக்கும்   இடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

​நேற்று (05) மாலை 6.00 மணி முதல் 9.45 வரை, முதலமைச்சரின் அலுவலகத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, முதலமைச்சர் தனக்கு இருக்கும் சட்ட ரீதியான தற்துணிவான அதிகாரத்தை பயன்படுத்தி மாகாண அமைச்சரவையில் மாற்றம் செய்ய அல்லது திருத்தியமைக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன.

அத்துடன், அமைச்சர்கள் மாற்றம் செய்யப்பட்டால் அவர்கள் குற்றம் செய்யப்பட்டதாக அர்த்தப்படாது. அமைச்சரவையில் நியமனங்கள் செய்யப்படும் போது தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் அங்கத்துவக் கட்சிகளுடைய ஆலோசனைகள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும் என மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக விரைவில் சந்திப்பொன்று இடம்பெறும் எனவும் இதன் போது குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

குறித்த சந்திப்பு தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு