வடக்கு அமைச்சரவையை மாற்ற முதலமைச்சருக்கு முழு அதிகாரமுண்டு சம்மந்தன் முன் பங்காளி கட்சிகள்


வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையை மாற்றவோ, திருத்தியமைக்கவோ முதலமைச்சருக்கு இருக்கும் சட்டரீதியான தற்துணிவு அதிகாரங்களை பயன்படுத்தி மேற்கெள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள்  தெரிவித்துள்ளன.

இதனை வடக்கு  முதலமைச்சர் மற்றும் சம்மந்தன்  ஆகியோருக்கு முன் தெரிவித்து அதற்கான தங்களின்இணக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனா்.

வடக்கு மாகாண சபையின முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவா் இரா. சம்மந்தன், பங்காளி கட்சிகளின் தலைவா்கள் ஆகியோருக்கிடையிலான  சந்திப்பு நேற்று சனிக்கிழமை முதலமைச்சரின் வாசல்தளத்தில் இடம்பெற்றது. இதன் போதே பங்காளி கட்சிகளின் தலைவா்கள் இதனை தெரிவித்துள்ளனா்.

இந்த விடயத்தில் பங்காளி கட்சிகள் எவ்விதத்திலுமு் தலையீடு செய்யாது என்ற உறுதிமொழியும் முதலமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இனிவரும் வரும் ஒரு வருட காலத்தில் வடக்கு மாகாண சபை  தங்களுக்குள் இருக்கின்ற முரண்பாடுகளை விடுத்து செயற்படவுள்ளதாக முதலமைச்சரும் தெரிவித்தாா்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு