யாழில் நேற்றும் இன்றும் 25 பேர் கைது,18 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன


யாழ்ப்பாணத்தில் நேற்றும் இன்றும் தொடர்ச்சியான சுற்றிவளைப்புக்கள்  தேடுதல்கள் மூலம் 25 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதோடு, 18 வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் துன்னாலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, ஆறு ஹன்ரா் வாகனங்களும்,11 மோட்டாா் சைக்கிள்களும்  கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை நேற்யை தினமே  கோண்டாவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட  சுற்றிவளைப்பில் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அத்தோடு இன்று ஞாயிற்றுக் கிழமை  துன்னாலையில் கடவத்தை, வேம்படி பகுதிகளில்  மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதோடு, பல்சர மோட்டாா் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்றும் இன்றும் விசேட அதிரடிப்படையினர் பொலீஸாா்  ஆகியோா் இணைந்து மேற்கொள்ளும் சுற்றி வளைப்புகளும், தேடுதல்களும் காரணமாக ஒரு வித பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.  மக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு