வடக்கில் எந்த அமைச்சுப்பொறுப்புக்களையும் தமிழரசுக் கட்சி ஏற்காது. சத்தியலிங்கமும் பதவி விலகுவாா்


வடக்கு மாகாண சபையில் எந்த அமைச்சுப் பொறுப்புக்களையும் தமிழரசுக் கட்சி ஏற்காது என்றும்   வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கமும் தனது அமைச்சுப் பொறுப்பிலிருந்து விலகுவாா் எனவும்  தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் நேற்று யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடிய தமிழரைசுக் கட்சியின் மாகாண சபை  உறுப்பினா்கள்  மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளனா்.

வடக்கு மாகாண அமைச்சர் நியமனத்தில் முதலமைச்சரின் முழு  உரிமையையும் ஏற்றுக்கொள்வதாக கூட்டமைப்பின்  தலைவா்கள் இணங்கிகொண்ட சில மணித்தியாலயங்களில் இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாவை சேனாதிராஜா ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போது

வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற  கூட்டத்தில் முதலமைச்சர் தமிழரசுக் கட்சியை ஒரங்கட்டும் வகையிலேயே பேசியிருந்தாா்.  எனவே முதலமைச்சருடனான சந்திப்பு திருப்தியாக அமையவில்லை. அமைச்சரவை மாற்றத்தின் போதும் தமிழரசுக் கட்சியை முற்றாக ஓரங்கட்டுவது போன்றே அவரது பேச்சு அமைந்திருந்தது எனவும் தெரிவித்தாா்.

இது தொடர்பில்  கருத்து தெரிவித்த சில  மாகாண சபை உறுப்பினா்கள் வடக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு இதுவரைக்கும் தமிழ் மக்களுக்கு உருப்படியான எதனையும் செய்யவில்லை, இனிவரும் ஒரு வருடகாலத்திலும் இவ்வாறு இழுபறிகள், பழிவாங்கல்கள், போட்டிகள் என காலம் கடக்கப் போகின்றது. எனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு வாழ் மக்களை பொறுத்தவரை முதலாவது வடக்கு மாகாண சபை துரோகம் இழைத்ததாகவே அமையும். என கவலை தெரிவித்தனா்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு