அனந்தியின்அமைச்சு பதவியை பறியுங்கள் முதல்வரிடம் மாவை கோரிக்கை


வடக்கு மாகாண சபையில் உள்ள ஒரேயொரு பெண் உறுப்பினரான அனந்தி சசிதரனுக்கு வழங்கப்பட்டுள்ள வட மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள், புனர்வாழ்வு மற்றும் கூட்டுறவு அமைச்சு  பதவியை மீளப் பெறுமாறு மாவை சேனாதிராஜா முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளாா்.

தமிழரசுக் கட்சியை சேர்ந்த அனந்தி சசிதரனுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளதால் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கியதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவியை மீளப்பெறுமாறு  மாவை சோனாதிராஜா வலியுறுத்திய போது

அனந்தி சசிதரனுக்கு எதிராக மேற்கொண்ட ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் தனக்கு எழுத்து  மூலம் அறியத்தருமாறு முதலமைச்சர் மாவையிடம்  தெரிவிக்க,  எழுத்து மூலம் வழங்க முடியாது என்றும்  தனது கோரிக்கையை ஏற்று  நடவடிக்கை எடுக்குமாறும் மவை தெரிவித்துள்ளாா்.

கடந்த சனிக்கிழமை வட மாகாண முதலமைச்சரின் வாசல்தளத்தில்  இடம்பெற்ற  முதலமைச்சருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கும்  இடையே இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு