கிளிநொச்சி மலையாளபுரம் வீட்டு கிணற்றிலிருந்து வெடிப்பொருட்கள் மீட்பு


IMG_0975

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள மலையாளபுரம் கிராத்தின் வீட்டுக் கிணற்றிலிருந்து நேற்று பெருமளவு வெடிப்பொருட்கள்  மீட்கப்பட்டுள்ளன.
இது  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
இந்தியா விழுபுரம்  மாவட்ட ஈழ அகதிகள் முகாமிலிருந்து கடந்த வருடம்  நாடு திரும்பிய  சின்னையா சுப்பிரமணியம் என்பர் தனது   காணியில் உள்ள தோட்டக் கிணற்றை   நேற்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை தூர் வாறிய போதே கிணற்றில்  வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளன.
இதன் போது இரண்டு கிளைமோர், கை குண்டு ஒன்று, மோட்டாா் குண்டுகுள் இருபது, தோட்டாக்கள், தோட்டாக்கள் அடங்கிய பெட்டிகள் ஜந்து  உள்ளிட்ட வெடிப்பொருட்கள் கிணற்றை சுத்தம் செய்தவா்களால் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து காணி உரிமையாளரால் அருகில் இராணு முகாமுக்கு அறிவிக்கப்பட்டு இராணுவத்தினரால் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
.இதனையடுத்து இன்றைய தினம் திங்கள் கிழமை கிளிநொச்சி பொலீஸாரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டு மேலதிக தேடுதலுக்கும் செயலிழக்கச் செய்வதற்கும் கிளிநொச்சி விசேட அதிரடிபடையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு