ஆவா குழுவைச் சேர்ந்த பிரதான நபா் கைது – பொலீஸாா் தகவல்


 

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிரதான சந்தேக நபர் கொழும்பில் வைத்து இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார்  என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவா்  ஆவா குழுவைச் சேர்ந்த பிரதான நபா் எனவும் பொலீஸாா்  தெரிவிக்கின்றனா்.

பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால், 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இதுவரை நான்கு பெண்களும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு