வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளாா்


Dr.P.Sathiyalingamதமிழரசுக் கட்சியை சேர்ந்த  வடமாகாண சபையின் சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் இன்று திங்கள் கிழமை தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக  தெரிவித்துள்ளாா்.

வவுனியாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளாா

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடையேயான நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில், வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் தாம் பங்கேற்கப் போவதில்லை   என தமிழரசுக் கட்சியை சேர்ந்த மாகாண சபை உறுப்பினா்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தனா். இதனடிப்படையில் சுகாதார அமைச்சரும் தனது பதவியை இராஜினாமா செய்யவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அடிப்படையில் சுகாதார அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளாா்.

இதேவேளை வடக்கு மாகாண சபையின் ஆயுட் காலம்  அடுத்த வருடத்துடன் முடிவுக்கு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு