இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூடு? சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டாா்


625.0.560.320.160.600.053.800.700.160.90qqqaa-1யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீது இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அடையாள அணிவகுப்பில் இனங்காணப்பட்டுள்ளார்.

யாழ். நீதவான் நீதிமன்றில், குறித்த வழக்கு நீதவான் எஸ். சதீஸ்கரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதன்போதே சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நல்லூர் பின் வீதியில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை வழிமறித்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றொரு மெய்ப்பாதுகாவலர் காயமடைந்திருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் புங்குடுதீவைச் சேர்ந்த செல்வராசா ஜெயந்தன் என்பவர், கடந்த மாதம் 25ஆம் திகதி யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

யாழ்ப்பாணம் பொலிஸார் அன்றைய தினம் மாலையில் சந்தேக நபரை நீதவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தியபோது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மூடிய மன்றில் நடைபெற்ற இந்த அடையாள அணிவகுப்பில் நீதிபதி இளஞ்செழியனின் வாகனச் சாரதி, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சம்பவத்தின் போது அங்கு தரித்து நின்ற மோட்டார் சைக்கிளின் உரிமையாளர்கள் ஆகியோர் சந்தேக நபரை அடையாளங்காட்டினர்.

அதன்படி கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு