சொந்த நிலத்திற்கான இரணைத்தீவு மக்களின் போராட்டம் இன்று கொழும்பில்


 

20706552_1197905043647886_1146331385_n

தமது பாரம்பரிய நிலங்களை விடுவிக்கக் கோரி, இரணைத்தீவு  மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளமையால், கொழும்பு – கோட்டை – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தங்களது பூர்வீக  இடத்தில் மீள குடியேற வேண்டும் என வலியுறுத்தி தொடர்  கவனயீர்ப்பு போராட்டத்தை  ஆரம்பித்து இன்று 101 வது  நாளாகும். இதனை முன்னிட்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன் தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை  காலை ஆரம்பித்து்ளளனர். இன்று காலை கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாள் அவர்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

அத்தோடு, இரணைத்தீவு மக்கள்  ஜனாதிபதி அலுவலகம் நோக்கி செல்ல முற்பட்டதாக,  இதனால் கொழும்பு – கோட்டை – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தங்களது சொந்த நிலத்திற்குச் செல்வதற்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 101 நாளளை எட்டியுள்ள நிலையில் தங்களை தங்களது  மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மிடம் வருகை தந்த  இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் சரி எவரும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலேயே கொழும்பில் தங்களது போராட்டத்தை  மேற்கொண்டுள்ளதாக இரணைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனா்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு