இனங்களுக்கிடையேயான குரோதங்களை நீக்க நானும் மகிந்தவும் சேர்ந்து செயற்பட விரும்புகிறேன்


 

mahinda-tna-

தமிழ் – சிங்கள மக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள குரோதங்களை நீக்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் வினைச்சொற்கள் விபரித்தல்” என்ற தலைப்பில், ஜுலம்பிட்டியே மங்கள தேரரால் எழுதப்பட்டுள்ள நூலின் வெளியீட்டு விழா, மேல் மாகாண கலாசார சதுக்கத்தில், நேற்று (08) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, சர்வமதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய இரா. சம்பந்தன், “ஜுலம்பிடியே தேரரால் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம், இந்நாட்டின் தமிழ் – சிங்கள மக்களுக்கான உறவுப்பாலமாக அமையும்.

தமிழ் – சிங்கள மக்களுக்கும் இடையில், இந்தப் புத்தகம் ஓர் உறவை ஏற்படுத்தும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, யாழ்ப்பாணத்தில் பிக்குமார்கள் பாடசாலைகளுக்குச் சென்று சிங்களம் கற்பித்தார்கள். தமிழ் மாணவர்களும் ஆர்வத்துடன் கற்றார்கள்.

“ஆனால் அரசாங்கத்தின் மொழிக்கொள்கை, அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் மாற்றமடைந்த காரணத்தால், துரதிர்ஷ்ட வசமாக மேற்படி சிங்கள மொழி கற்பிக்கும் செயற்பாடுகள் தடைபட்டுப் போயின.

“வடக்கு, கிழக்கில், பல அழிந்த பெளத்த விகாரைகளில், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு காலகட்டத்தில், தமிழ் மக்களில் குறிப்பிட்ட சிலர், பெளத்தர்களாகவும் இருந்தார்கள்.

“அதனால், எம்மத்தியில் ஏற்பட்டுள்ள குரோதங்களை இலகுவாக நாம் நீக்கிக்கொள்ள முடியும்.
“இந்தப் பணியை, முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷவும் நானும் இணைந்து, நாட்டு மக்களுக்காக நிறைவேற்ற வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு