சேவைக்காலம் கணிக்காமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்


4434361329_4e1c455f48வடமாகாணத்தில் 2013 இல் ஆசிரியர் நியமனம் பெற்றவர்களை 2016 இல் நியமனம் பெற்றதாகக் கணித்தமையால் தாம்  பாதிக்கப்பட்டுள்ளதாக  ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனா்
வடமாகாணத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்ற யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதி ஆசிரியர்களது சேவைக் காலத்தை 2016 ஆம் ஆண்டு நியமனம் பெற்றவர்களாகக் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு கணித்துள்ளமையால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களது 3 வருட சேவைக் காலம் கருத்திற்கொள்ளப்படாது விடப்பட்டுள்ளதாகக் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த 01.07.2013 அன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதாகக் கூறிக்கொண்டு ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனம் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சால் வழங்கப்பட்டது. இவர்கள் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பயிற்சிகளை முடித்த பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இவர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவையின் தரம்- 3-1(ஆ) இற்குள் உள்ளீக்கப்பட்டார்கள்.
இவர்கள் ஆசிரியர்களாக கடந்த 2013 இல் சேர்த்துக்கொள்ளப்பட்ட போது இவர்களுக்குரிய ஆசிரியர் சேவையின் தரம்- 3-11 கருத்திற்கொள்ளப்படாது. இவர்கள் 2016 ஆம் ஆண்டே ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்ளப்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தாம் 2013 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளில் ஆசிரியர்களாகச் சேவையாற்றிய 3 ஆண்டுகளும் கருத்திற்கொள்ளப்படாது விடப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக ஏற்கவே யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தாம் தமது சேவைக் காலம் பதவி உயர்வு, சம்பள ஏற்றம் போன்றவற்றின் போது பாதிக்கப்படுவதாகவும் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் குறித்து வடமாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராசாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ள போது தமது சேவைக் காலத்தை தமக்கு நியமனம் வழங்கப்பட்ட 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து கணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்பட்டுள்ள நிலையில் அவர் திடீரெனப் பதவி விலக்கப்பட்டு புதிய கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்ற யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதி ஆசிரியர்களின் சேவைக் காலம் 2016 ஆம் ஆண்டு நியமனம் பெற்றுள்ளதாகக் கணிக்கப்பட்டு தமது 3 வருட சேவைக் காலம் கருத்திற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களால் கூறப்படுகின்றது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர்களாகப் பாடசாலைகளில் கற்பித்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட தமது சேவைக் காலத்தை 3 வருடங்களைக் கருத்திற்கொள்ளாது விட்டு தாம்மை 2016 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றுள்ளதாக தமது சேவைக் காலத்தைக் கணிக்காது தாம் ஆசிரியர்களாக நியமனம் பெற்ற 2013 ஆம் ஆண்டிலிருந்தே தமது சேவைக் காலத்தைக் கணிக்க வடமாகாணத்தின் புதிய கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தகுந்த நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு