அவா் நீதியரசர் நான் சட்டத்தரணி முடிந்தால் பதவி நீக்கட்டும் – டெனீஸ்வரன்


DSC_0732_mini-720x450நான் அமைச்சுப் பதிவியிலிருந்து விலகமாட்டேன் முதலமைச்சருக்கு அதிகாரம் இருந்தால் அதை பயன்படுத்தி நீக்கட்டும் என  வடக்கு மாகாண போக்குவரத்து மீன் பிடி அமைச்சர் ப. டெனீஸ்வரன் உறுதியாக தெரிவித்துள்ளாா்.

அவா் நீதியரசர் என்றால் நான் சட்டத்தரணி என்னை பதவியிலிருந்து நீக்கினால் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். என டெனீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

வடக்கு மாகாண அமைச்சரவையில் முதலமைச்சரை தவிர ஏனைய நான்கு அமைச்சர்களில்   இருவா்   விசாரணைக்குழுவின்  ஊழல் குற்றச்சாட்டின்  அடிப்படையில் பதவியிலிருந்து விலகிகொண்டதனை   தொடர்ந்து சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் நேற்று முன்தினம் பதவியை இராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து தற்போது அமைச்சர் டெனீஸ்வரன் மாத்திரமே உள்ளாா்.

இந்த நிலையில்  வடக்கு முதலமைச்சர் தனது அமைச்சரவையை முழுதாக மாற்றி அமைக்கப் போவதாக தெரிவித்து வருகின்றா். இதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதும் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையிலேயே டெனீஸ்வரன்  இவ்வாறு தெரிவித்துள்ளாா். தான் எவ்வித குற்றமும் செய்யவில்லை என்றும் . இந்த நிலையில் காரணமின்றி என்னால் பதவி விலக முடியாது என்றும் அவர் உறுதிப்பட  தெரிவித்துள்ளாா்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு