2020 வரை இந்த அரசாங்கமே ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதில்லை -அமைச்சர் திகாம்பரம்


palani-thikamparamஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளித்த எந்தவொரு பங்காளி கட்சிகளும் அதிலிருந்து விலகப் போவதில்லை 2020 வரை இந்த அரசாங்கமே ஆட்சியில் இருக்கும்  என, அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அம்பேவலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ன கூறினாலும் 2020ம் ஆண்டு வரை அரசாங்கத்தை மாற்ற முடியாது எனக் குறிப்பிட்ட பழனி திகாம்பரம் மேலும் கூறியுள்ளதாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை இன்று பெறுவோம், நாளை பெறுவோம் என்றார். பின்னர் நாமல் ராஜபக்ஷ அதனை சொல்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த, மஹிந்த ராஜபக்ஷவை வெகு விரைவில் பிரதமராக்குவோம் என்கிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் 105 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். நாங்கள் எப்போதும் கூட்டணியில் இருந்து வெளியேற போவதில்லை. இப்படியான நிலைமையில் எப்படி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.  நாம் சொல்கிறோம் முடிந்தால் அதை செய்யுங்கள் என்று. யாரும் பயப்பட வேண்டாம் 2020ம் ஆண்டு வரை இந்த அரசாங்கம் இருக்கும், என்றார் அமைச்சர் திகாம்பரம்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு