பொலீஸாா் மீது தாக்குதல் 07 சந்தேகநபா்களை அடையாள அணிவகுப்பு உத்தரவு


கோப்பாய் பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டடுள்ளது.

அதேவேளை அன்றையதினம் அவர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரு பொலிஸார் மீது ஆவா குழுவினரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

வாள்வெட்டுச் சம்பவத்தின் பின்னர் ஆவா குழுவைச் சேர்ந்த சந்தேகநபர்கள் 7 பேர் பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட 7 இளைஞர்களும் நேற்று மாலை யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கத்தின் வாசஸ்தலத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு