சமூர்த்தி பயனாளிகள் மீளாய்வின் எதிரொலி நாடாளுமன்ற நடவடிக்கை ஒத்திவைப்பு


 

தற்போது நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சமூர்த்தி பயனாளிகள் மீளாய்வு நடவடிக்கை காரணமாக சமூர்த்தி பயனாளிகள்  பெரும்பாலனவா்கள் அதிலிருந்து நீக்கப்பட்டிருந்தனா். இதனால் நாட்டின் பல இடங்களிலும் பொது மக்கள் பிரதேச செயலகங்கள் முன் திரண்டு ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்திருந்தனா்.

இதன் எதிரொலியாக இன்று வியாழக்கிழமை  நாடாளுமன்றத்தின், சபை நடவடிக்கைகளில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக, சபை நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஒத்திவைக்கப்பட்டன.

இதனையடுத்து, கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு  சபாநாயகா் அழைப்பு விடுத்துள்ளாா்.

சமுர்த்தி பயனாளிகளின் கொடுப்பனவுகள் இல்லாமற் செய்யப்படுவதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவரான தினேஷ் குணவர்தன, விசேட கூற்றொன்றை விடுத்து சபையில் உரையாற்றினார்.

தன்னுடைய, கேள்விக்கு அரசாங்கம் உரிய பதிலை இப்போதே வழங்கவேண்டுமென்றும் அவர்  கோரிநின்றார்.

எனினும், விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் சபையில் இன்மையால், இக்கேள்விக்கு, பிறிதொரு தினத்தில் பதிலளிக்கப்படும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அதற்கு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் எம்.பியுமான அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததையடுத்தே, சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு