புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன?


tilak-marapanaபிணைமுறி விவகாரம் தொடர்பில் எழுந்த சர்சையை தொடர்ந்து தனது பதவியை இராஜனாமா செய்த வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின்  அமைச்சுப் பதவிக்கு திலக் மாரப்பனவுக்கு வழங்கப்படவுள்ளதாக சில  தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்து, அப்பதவி, அபிவிருத்திப் பணிப்பொறுப்புகள் அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு வழங்குவதற்கு  அரசாங்கத்திற்குள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது எனக் கூறப்படுகிறது. அவர், இன்று வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமையன்று பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில், புதன்கிழமையன்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது, அமைச்சர் திலக் மாரப்பனவைத் தயாராக இருக்குமாறு, ஜனாதிபதியும் பிரதமரும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு