போக்குவரத்து குற்றங்களுக்கு 25 ஆயிரம் தண்டம்


இலங்கையில்  போக்குவரத்து குற்றங்களுக்காக 25 ஆயிரம் ரூபா வரை தண்டம் விதிப்பதற்கு  அமைச்சரவை  ஒப்புதல் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்துள்ளாா். அவா் மேலும் தெரிவிக்கையில் அதிகாரம் பெற்ற போக்குவரத்து அனுமதிப் பத்திரங்கள் இன்றி வாகனங்கள் செலுத்துதல், போக்குவரத்து அனுமதி  பத்திரம் அற்ற சாரதி ஒருவரை சேவைக்கு அமர்த்துதல், மதுபானம் அல்லதுமு போதைப்பொருள் பாவித்து வாகனம்  செலுத்துதல், தொடரூந்து கடவையில் முறையற்ற விதத்தில் வாகனங்களை செலுத்துதல், அதிகாரம் பெற்ற காப்புறுதி இன்றி வாகனம் செலுத்துதல்  போன்றவற்றுக்கு 25 ஆயிரம் ரூபா வரை  தண்டம் விதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறிக்கப்பட்ட வேகத்தை விட 20 வீதம் வரையான அதிகரித்த வேகத்திற்கு மூவாயிரம் ரூபாவும், 20 வீதத்திற்கு 30 வீதத்திற்கும் இடையில் ஜயாயிரம் ரூபாவும், 30 வீதத்திற்கு அதிகமான வேகத்திற்கு 10 ஆயிரம் ரூபாவும், எனும் அடிப்படையில் உரிய இடத்தில் தண்டம் அறவிடப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு