கதிர்காமம் சென்று திரும்பிய சிறுவா்கள் வைத்தியசாலையில்


 

krrr_3நடந்து முடிந்த  வருடாந்த திருவிழாவுக்கு  கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு சென்று திரும்பிய சிறுவா்கள் சிலா்  நோய்வாய்ப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிசை பெற்று வருகின்றனா்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் அன்மையில் அனுமதிக்கப்பட்ட மூன்று சிறுவா்கள் வாந்தி, வயிற்றோட்டம், காச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிசை பெற்று வருகின்றனா்.
இந்த மூன்று சிறுவா்களும் உறவினா்களுடன் கதிர்காமம்  கோயிலுக்குச் சென்று திரும்பியவா்கள்.
நீர் மற்றும்  உணவு பிரச்சினைகளால் சிறுவா்கள் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
ஆலயத்தின் ஆலயத்தின் தீர்த்த நதியான மாணிக்க கங்கையில்  போதிய நீர் இன்மையால் நீரோட்டம் இன்றி தேங்கி  நின்ற நீரில் இலட்சக் கணக்கான மக்கள் திருவிழாக் காலங்களில் நீராடினாா்கள் என சென்று வந்த மக்கள் குறிப்பிட்டனா்.
இதேவேளை சிறுவா்களுக்கு வாந்தி வயிற்றோட்டம், காச்சல்  காணப்பட்டால் உடனடியாக அரச மருத்துவமனையை  நாடி  உரிய சிகிசை பெற்றுக்கொள்ளுமாறு வைத்திய துறையினா் கேட்டுள்ளனா்
உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு