சமூர்த்தி பயனாளிகள் நீக்கப்படமாட்டாா்கள் – ஜனாதிபதி


Maithripalaதற்போது சமூர்த்தி பயனாளிகளாக இருக்கின்றவா்கள் ஒரு போதும்  நீக்கம் செய்யப்படமாட்டாா்கள் என ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளாா்.

அன்மைக்காலமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும்  நீக்கம் செய்யப்பட்ட சமூர்த்தி பயனாளிகள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுவந்த நிலையில் ஜனாதிபதி  இவ்வாறு அறிவித்திருக்கின்றாா்

சமுர்த்தி அனுகூலங்களைக் குறைப்பதற்கு அல்லது நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளாது என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

சமுர்த்தி நன்மைகளைப் பெறத் தகுதியுடைய ஆனால், அது வழங்கப்படாத பெருந்தொகையானோர் நாட்டில் காணப்படுவதுடன், அவர்களுக்கு புதிதாக அந்த வரப்பிரசாதங்களை வழங்குவதனைத் தவிர்த்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்கனவே நன்மைகளை பெறுபவர்களின் சமுர்த்தி கொடுப்பனவுகள் நீக்கப்படமாட்டாதென ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

இன்று (11) முற்பகல், எம்பிலிப்பிட்டிய கம்உதாவ விளையாட்டரங்கில் நடைபெற்ற வளவை வலய விவசாய மக்களுக்கு 5,000 காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

சமுர்த்தி நன்மைகளை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பல்வேறு அரசியல் தூண்டுதல்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்று தெரிவித்த ஜனாதிபதி, பொதுமக்களின் நன்மைகளை கருதியே தற்போதைய அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளுமென தெரிவித்தார்.

சமுர்த்தி நிவாரணம் குறைக்கப்பட்டுவருவதாகக் குற்றஞ்சாட்டி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பிகள், கறுப்பு பட்டியணிந்து பதாதைகளை ஏந்தியவாறு,  நாடாளுமன்றத்தில், நேற்று (10) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்.பியுமான அநுரகுமார திஸாநாயக்க, “சமுர்த்தி நிவாரணம் கழிக்கப்படமாட்டாது என்ற உறுதிமொழியை, அரசாங்கம் இன்றே (நேற்று) வழங்கவேண்டும்” என்று, கேட்டிருந்தார்.

இன்று நண்பகலுக்குள் அதற்கான முடிவு அறிவிக்கப்படும் என, அமைச்சர் கயந்த கருணாதிலக பதிலளித்திருந்தார்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு