புலம்பெயர் தமிழர்களால் பாதிப்படைகிறேன் – மகிந்த ராஜபக்ஸ


mநாட்டில் இடம்பெற்ற யுத்தத்ததை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதன் மூலம் அனைவரும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனா். ஆனால் அதனை என்னால் அனுபவிக்க முடியவில்லை  என்று  ஆதங்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஸ புலம் பெயர் தமிழர்களால் தான் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

அண்மையில் கொழும்பில் நடந்த நிகழ்வென்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா். அவா் மேலும் தெரிவிக்கையில்

என்னால் எந்தவொரு நாட்டுக்கும்  செல்ல முடியவில்லை ஏன்னென்றால் அங்கு அனைத்துலக  மற்றும் புலம்பெயர் தமிழர்கள்என் மீது குற்றச் சாட்டுகளை முன்வைக்க காத்திருக்கின்றனா்.

பல நாடுகளில் எனது தலைமையிலான குழுவினர் பல பிரச்சினைகளுக்க முகம் கொடுப்ப நேரிட்டது. 2011 ஆம் ஆண்டு கொமன்வெல்த் மாநாட்டுக்காக அவுஸ்ரேலியா சென்றிருந்த  போது புலம்பெயர்  தமிழர்கள் சிலா் தமது பிள்ளைகளை என்னால்தான் இழக்க நேரிட்டதாக கூறி என்னை கைது செய்யுமாறு  கோரியிருந்தனர்.

நான் பிரித்தானிய சென்ற போது எனது குழுவில் இருந்தவா்கள் மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய முயன்றனா். அமெரிக்கா சென்ற போது எனக்கு எதிராக நீதிமன்றம் சென்றனர்  எனினும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக  நான் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளானேன், பெரிதும் பாதிப்படைந்தேன். எனத் தெரிவித்த மகிந்த

நாட்டு மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த அதன் நன்மைகள் எனக்கு கிடைக்கவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளாா்

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு