மத்தள விமான நிலையத்திற்குள் இந்தியா, ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் சீனா


 

mattala-rajapksa-airportமத்தள விமான நிலையத்தின் உரிமையை  பெறும் நோக்கில் 205 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்ய இந்தியா தயாராகியுள்ள நிலையில்,  விமான நிலையத்திலிருந்து 40 கிலோ  மீற்றர் தொலைவில் ஹம்பாந்தோட்டை  துறைமுகத்தின் உரிமையை சீனா ஏற்கனவே  பெற்றுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்று பின்வருமாறு செய்திவெளியிட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்திற்கு 205 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கான இந்திய அரசாங்கத்தின் யோசனை தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று  செய்தி வௌியிட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தின் நிர்வாகம், முகாமை, பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றிற்காக இந்திய அரசாங்கம் முன் வந்துள்ளதாக  குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சீனாவினால் உரிமை பெறப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மத்தள விமான நிலையத்திற்காக முதலீடு செய்ய முன் வந்துள்ளமை இந்தியாவின் தந்திரோபாய முறையாகும் என்று குறித்த இந்திய ஊடகம் கூறியுள்ளது.

இந்த யோசனை ஊடாக குறித்த விமான நிலையத்தின் 70% உரிமையை 40 ஆண்டுகளுக்கு இந்திய பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் மத்தளை விமான நிலையத்தை அரச மற்றும் தனியார் இணைந்த அதிக வருமானம் பெரும் விமான நிலையமாக மாற்றும் நோக்கில் அதன் பங்காளியாகும் யோசனை ஒன்று இந்திய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக அண்மையில் கூறியிருந்தமை கூறத்தக்கது.

இது தொடர்பில் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து கூறும் போது பிராந்திய வல்லரசுகளின் போட்டி களமான இலங்கை மாறியிருப்பதன்  வெளிப்பாடே இது என்கின்றனா்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு