நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பதவி நீக்கப்படுவரா?


vijayadasa-720x480-720x480-720x4801நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்  ஆராய்ந்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் இருந்து விஜயதாச ராஜபக்ஸவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஜ.தே.கட்சியிலிருந்து தொடர்ச்சியாக பல நாடாளுமன்ற உறுப்பினா்கள்  கட்சி தலைமைக்கு அழுத்தங்கள் கொடுத்து வரும் நிலையிலேயே ஜனாதிபதியும் பிரதமரும் இது தொடர்பில் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ மீது ஜ.தே. கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினா் பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்அத்தேதாடு விஜயதாச ராஜபக்ஸ மீது நம்பிக்கையில்லா தீர்மனம் கொண்டுவரவும் அவா்கள் முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அம்பாந்தோட்ட துறைமுகம் தொடர்பான முடிவை விமர்சித்து  அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறியமை, அவரது அமைச்சின் கீழ் உள்ள சட்டமா அதிபா் திணைக்களம் முன்னாள் ஆட்சியாளர்களான மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகளை இழுத்தடிக்கின்றமை போன்ற விடயங்கள் தொடர்பாக  விஜயதாச மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதேவேளை விஜயதாச அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை எனில் அவருக்கெதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கும்  ஜதேக உறுப்பினா் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு