தனிவழி செல்ல யோசிக்கின்றாா் ரணில்


Ranil1கூட்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு சிறிலங்கா சுந்திரகட்சியினர் தொடர்ந்தும் நெருக்கடிகளையும், இடையூறுகளையும் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வார்கள் என்றால்  அக் கட்சியுடனான கூட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறி  தனியே ஆட்சியமைக்க  ஜக்கிய தேசிய கட்சியின் தலைமைக்கு உறுப்பினா்கள்  அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் யோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திர கட்சியும்  இணைந்து கூட்டு அரசாங்கத்தை  அமைத்துள்ள போதும் அரசாங்கத்தில் பெரும்பான்மை பலத்தை  ஜக்கிய தேசிய கட்சியே கொண்டுள்ளனா். ஆதாவது அரசாங்கத்திற்குள் 106 உறுப்பினா்களை  ஜதேக  கொண்டுள்ளனா். 45 உறுப்பினர்களை  சிறிலங்கா சுதந்திர கட்சியும் கொண்டுள்ளனா்.

இந்த நிலையில் ஜதேகவினால் அரசாங்கத்திற்குள் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு சிறிலங்கா சுந்திர கட்சியினா் அடிக்கடி  எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனா்.

இதன்படி அரசாங்கத்திற்குள் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றும் பெரும்பான்மை பலம் ஜதேகவுக்கு காணப்படுகிறது. ஆனால் தீர்மானங்களை நிறைவேற்றும் போது சிறிலங்கா சுந்திர கட்சியின் உறுப்பினா் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனா். எனவேதான் ஜதேக தனி  ஆட்சியமைக்க வேண்டும் என கட்சி உறுப்பினா்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும்  அழுத்தம் கொடுத்து வருகின்றனா்.

எனவேதான் ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தபின்னர் தனி வழி செல்ல  யோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு