தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் இனம் கண்டு படுகொலை செய்யுங்கள் கேட்கவரமாட்டோம் – விஜயகலா


IMG_1257தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்கள படுகொலை செய்திருக்கின்றீர்கள்  என சிறுவா் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளாா்.
இன்று சனிக்கிழமை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிலமெஹர ஜனாதிபதி நடமாடும் சேவை நிகழ்வில் கலந்துகொண்ட  உரையாற்றும் போதே அவா் இதனை தெரிவித்துள்ளாா். அங்கு அவா் மேலும் தெரிவிக்கையில்
யுத்தத்தை எப்படி இவா்கள்  முடிவுக்கு கொண்டுவந்திருக்கின்றாா் என்பதை நாம் பார்க்க வேண்டும் சிறுவா்கள் முதியோா்களை கொன்றுதான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனா். இ்பபடியானவா்கள் மீண்டும்  ஒரு அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு சர்வதேசம் அனுமதிக்க கூடாது. எனவே எங்களுடை நல்லாட்சி அரசாங்கம் நீண்ட காலத்திற்கு செல்ல வேண்டும். எனத் தெரிவித்த அவா்
 எங்களுடைய சொந்த கால்களில் வாழந்த எங்களை கடந்த அரசாங்கம்  கையேந்தி வாழும் நிலைக்கு தள்ளியுள்ளது. இனிவரும் காலங்களில்   இப்படியான அரசாங்கத்திலே யாா் அங்கம் வகித்தார்களோ, யாா் காட்டிக்கொடுத்தார்களோ,யார் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உறுதுணையாக நின்றாா்களோ அவர்களை இனம் காணுங்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்கள படுகொலை செய்திருக்கின்றீர்கள் அவா்களை அங்கவீனர்கள் ஆக்கியிருக்கின்றீர்கள், எங்களுடைய இளம் வயது பெண்களை விதவைகள் ஆக்கியிருக்கின்றீர்கள்.எனவே இவ்வாறனவா்களுக்கு நாங்கள் எதிர்வரும் காலங்களில் இடமளிக்க கூடாது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியை கொண்டு செல்லப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாத  சில தீய சக்திகள்  வாள் வெட்டு, கிறிஸ்பூதம், பள்ளிகளை அடித்தல்,   ஆலயங்களில் சிலைகளை கொண்டு செல்லுதல்  இ்பபடியான எத்தனையோ அட்டூழியங்களை அசெய்து வருகின்றாா்கள்.
எனவே இதிலிருந்து நாங்க்ள விடுதலைப்பெற வேண்டும் இதற்காகதான் நாங்கள் இந்த நல்லாட்சி  அரசை ஏற்படுத்தியிருக்கின்றோம்.2015 இற்கு  பின்னர் எத்தனையோ காணிகளை இராணுவத்தினடம் இருந்து மீட்டு மக்களுக்கு  வழங்கியிருக்கின்றோம். எனவே இப்படியான  நடவடிக்கைகளுக்கு  மக்கள் உறுதியான அரசாங்கத்தை தெரிவுசெய்ய வேண்டும், உறுதுியானவா்களை தெரிவு செய்ய வேண்டும். என்குறிப்பிட் அவா்
 தற்போது வடக்கு  மாகாணத்தின் கல்வி  நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. யுத்தத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் செல் தாக்குதல் பங்கா் வாழ்க்கை, காணாமல் போதல்,வெள்ளைவான் கடத்தல் இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இருந்த போதும் கல்வி முன்னேற்றத்தில் இருந்தது. ஆனால்  யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னா் கல்வி நிலைமை மிக மோசமாக இருக்கிறது எனவும் தெரிவித்தாா்
2 Attachments
உங்கள் கருத்து
  1. vanni arrachi on August 13, 2017 1:16 pm

    இந்த கலாவல்லி புலி-ஐக்கியதேசியகட்சியின் கூட்டுமூலமே அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

    இந்த கலாவல்லிக்கு எதுஎப்படியோ எங்கு எரிகிறதோ அணைகிறதோ எதை புடுங்கமுடியுமோ அதை புடுங்குவது தான் அரசியல்.

    தியாகராஜா மகேஸ்வரன் போல.

    அரசியலில் தேவடியாள் ஆட்டம் என்றுமே பொருத்தமில்லாதது.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு