வடக்கு மாகாண சபையின் நிதி திரும்புமாயின் முதலமைச்சரே பொறுப்பு – டெனீஸ்வரன்


@@@####கடந்த சில மாதங்களாக வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் சூழ்நிலையால் வட மாகாணத்திற்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி திரும்பிச் செல்கின்ற அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நிதி பயன்படுத்தப்படாமல் திரும்புமாயின் அதற்கான முழுப் பொறுப்பையும் முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டுமென்று வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, வர்த்தக வாணிபம் மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலைத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படாமல் சில அமைச்சுக்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை கிராம மட்ட அமைப்புக்களுக்கு பணமாக வழங்கிய வரலாறும் உண்டு.

அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கான நிதியை அமைப்புகளுக்கு பணமாக வழங்குவது என்று சொன்னால் அதனை சிறுபிள்ளை கூட கட்சிதமாக செய்து முடிக்கக் கூடிய வலுவுள்ளவர்களாக காணப்படுகிறார்கள்.

இவ்வாறு செய்வதென்று சொன்னால் இதற்கு படித்த மூடர்கள் வடமாகாண சபைக்கு தேவையில்லை.

ஆகவே கடந்த கால வரலாறுகளில் வடமாகாண சபைக்கு அதன் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் வெளியீடும் அதன் பயன்பாடும் எவ்வாறு இருந்ததென்பதை மக்களும் நன்கு அறிவார்கள் என அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு