கேப்பாபிலவு காணி விடுவிப்பு சம்மந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்


sampanthan-860-055கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களுக்கு விசேட கடிதங்களை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாபிலவிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் மேற்குறித்த விடயம் தொடர்பில் அதிமேதகு தங்களுக்கு ஜூலை 20ம் திகதி நான் எழுதியுள்ளேன். தங்களது செயலாளர் ஜூலை 28ம் திகதி அந்த கடிதத்திற்குப் பதிலளித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் 09.08.2017 அன்று எனக்குக் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அவற்றின் பிரதிகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன.

அவரது கடிதத்திற்கு 2017.08.11 ஆந் தேதியகடிதமூலம் நான் பதிலளித்திருந்தேன். அதன் பிரதியும் இதனகம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தங்களது எண்ணப்பாட்டினை நான் நன்கறிவேன். மக்களுக்குக் காணிகளை வழங்குவது தொடர்பில் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். இவர்கள் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள். இந்தமக்கள் தங்களது காணிகளுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள். இவர்களது பிறப்புரிமை மறுக்கப்படலாகாது. ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக தங்களது காணிகளிலிருந்து இவர்கள் வெளியேறியுள்ளார்கள்.

ஆயுதப் போராட்டம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்துள்ளது. இந்தக் காணிகளின் வாயிலில் இந்தக் காணிகளை மீளத்தருமாறு வேண்டி, இந்தமக்கள் கடந்த 165 நாட்களாக மழையிலும் வெயிலிலும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள். மிகுந்த மரியாதையுடன் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், கூடியவிரைவில் இந்தக் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதிமேதகு தாங்கள் இது தொடர்பில் ஒருவழிகாட்டலைக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தேவையேற்படின், அதிமேதகு தாங்கள் இது தொடர்பில் முடிவெடுக்கும் படியான ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்யுமாறும் தயவாக வேண்டுகிறேன். இது தொடர்பில் விரைவான தீர்வொன்றினை நான் தயவுடன் எதிர்பார்க்கிறேன்.  எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் எதிர்கட்சி தலைவா் கேப்பாபிலவு காணி விடயம் தொடர்பில் பிரிதொரு கடிதத்தையும் எழுதியிருக்கின்றாா்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு