குற்றச் செயல்களை முறையிட 24 மணிநேர சேவை


POLICEபோதைப் பொருள் பாவனை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் தொடர்பான முறைப்பாடுகளை, பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குத் தெரியப்படுத்துவதற்காக, 24 மணிநேர சேவையொன்றை, பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதன்பிரகாரம், போதைப் பொருள் தொடர்பாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட எந்தவொரு குற்றச்செயலாக இருந்தாலும், 011 2580518, 011 2058552 அல்லது 011 2081040 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தித் தெரிவிக்க முடியும் என்று, பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 011 2081044 / 011 2588499 என்ற தொலைநகல் இலக்கம் மூலமும், இது தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் ​பொலிஸார் அறிவித்துள்ளனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு