புதிய கடற்படைத் தளபதியாக ட்ரவிஸ் சின்னையா நியமனம்


322438492navy-slஇலங்கை கடற்படையின் புதிய கட்டளைத் தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

ரியல் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா இதுவரை இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக கடமையாற்றனைார்.

இந்நிலையில் இலங்கை கடற்படையின் சிரேஷ்ட உறுப்பினரான இவர் 21 வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இலங்கை கடற்படையின் தளபதியாக இருந்த ரவீந்தர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

2007ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் 10 கப்பல்களை அழித்தொழிப்பதற்குத் தலைமைதாங்கிய றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா என்ற தமிழர் தற்போது கடற்படைகளின் தளபதியாக  நியமிக்கப்பட்டுள்ளாா்.

தற்போது கிழக்குப் பிராந்தியத்தின் கட்டளைத் தளபதியாகச் செயற்படும் றியர் அட்மிரல் சின்னையா, மகிந்த ராஜபக்ஷ காலத்தில், அரசியல் பழிவாங்கல் காரணமாக நாட்டைவிட்டுத் தப்பிச்சென்றிருந்தார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடு திரும்பிய அவர், கிழக்குப் பிராந்தியத்தின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டு வருகின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளில் இவரும் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

 

உங்கள் கருத்து
 1. Alex Varma on August 18, 2017 11:05 pm

  He is not a Tamil…
  He is Burger – Tamil – Sihalese mixed Christian…


 2. BC on August 19, 2017 1:07 pm

  இலங்கை கடற்படையின் புதிய கட்டளைத் தளபதி திரு சின்னையா திறமை தகுதி மிகுந்தவர் ஆக இருப்பதினாலும் யாழ்பாண தமிழர் ஒருவராக இல்லாத படியாலும் வட­மா­காண அமைச்சர் டெனீஸ்­வரன் போன்று பேச தெரியாதவராக இருப்பதினாலும் இவர் முன்னுக்கு வந்தது புலம்பெயர் தமிழர்கள் பலருக்கு பிடிக்கவில்லை.


 3. BC on August 19, 2017 1:21 pm

  He is Burger – Tamil – Sihalese mixed Christian

  இயேசுவே என்ன கொடுமை இது பாதிரியார் இம்மானுவேல் எதற்காக?


 4. noolthettam on August 25, 2017 4:28 pm

  The Military History of Ceylon: an Outline/ Anton Muttukumaru. New Delhi, India: Navrang, RB-7, Inderpuri, 1st edition, 1987. (New Delhi, India: Welwish Printers, A-27, Naraina Industrial Area).
  (14), 227p., plates, maps., 24.5 x 16cm, ISBN: 81-7013-046-8.

  Major General Anton Muttukumaru, the author of this book, is also known as a lawyer and a diplomat. He was a senior Military officer in Sri Lanka. This book is a valuable document for its statement of the modern period since Independence in 1948. This is a record of comprehensive work covering Sri Lanka’s entire military history to the 80’s. It is divided into three parts; The Indian period, The Colonial period and the Modern period. (SOAS Library Accn No. 598600).


 5. noolthettam on August 25, 2017 4:32 pm

  சிறிலங்காவில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தமிழர் ஒருவரை படைத்தளபதிகளில் ஒருவராக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்திருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  சிறிலங்கா கடற்படையின் 21 ஆவது தளபதியாக, றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நேற்று சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டார். இவர் ஒரு தமிழரராவார்.

  1970ஆம் ஆண்டுக்குப் பின்னர், சிறிலங்காவின் தனிநாடு கோரிய தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் உருவான பின்னர், தமிழர்கள் எவரும், முப்படைகளின் தளபதியாக சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்படவில்லை.

  சிறிலங்கா ஆயுதப்படைகளில் சிங்களவர்களே பெரும்பாலும் அங்கம் வகித்திருந்த போதிலும், உயர் அதிகாரிகளாக இருந்த தமிழர்கள் சிலர், முப்படைகளுக்கும் தலைமை தாங்கும் தளபதியாக நியமிக்கப்படக் கூடிய வாய்ப்புகளைப் பெற்றிருந்தாலும், அந்த வாய்ப்புகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன.

  இந்த நிலையில், 1970 களுக்குப் பின்னர் முதல் முறையாக தமிழரான றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

  இவர் சிறிலங்கா கடற்படையின் தளபதியாக பொறுப்பேற்கும் இரண்டாவது தமிழர் ஆவார்.

  இதற்கு முன்னர், அட்மிரல் ராஜநாதன் கதிர்காமர் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக பதவி வகித்திருந்தார்.1960 நொவம்பர் 16ஆம் நாள் தொடக்கம், 1970 ஜூலை 30ஆம் நாள் வரை, சுமார் 10 ஆண்டுகள் அவர் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக பதவியில் இருந்தார்.

  சிறிலங்கா கடற்படையின் தளபதியாக நீண்டகாலம் பதவியில் இருந்தவர் இவரேயாவார்.

  அதேவேளை, சிறிலங்கா இராணுவத்தின் முதலாவது தளபதியாக, மேஜர் ஜெனரல் அன்ரன் முத்துக்குமாரு, 1955 பிப்ரவரி 09 தொடக்கம், 1959 டிசம்பர் 31 வரை பணியாற்றியிருந்தார்.

  போர் முடிவுக்கு வந்து 8 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா கடற்படைத் தளபதியாக, தமிழரான, றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான செய்திக்கு, அனைத்துலக ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளன.

  றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, முன்னைய ஆட்சிக்காலத்தில் கோத்தாபய ராஜபக்சவினால், அமெரிக்காவின் முகவர் என்று குற்றம்சாட்டப்பட்டவராவார்.

  அரசியல் பழிவாங்கல் அச்சுறுத்தலால் சிறிலங்காவில் இருந்து வெளியேறி, அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்திருந்தார். ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரே அவர் நாடு திரும்பினார் என்பதுது குறிப்பிடத்தக்கது.Tamilwin


 6. karuppan on August 26, 2017 4:47 pm

  “போர் முடிவுக்கு வந்து 8 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா கடற்படைத் தளபதியாக, தமிழரான, றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான செய்திக்கு, அனைத்துலக ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளன.”

  அனைத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு நாடகமே இது என்றும் சிலர் கருதுகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் கூட இப்போது ஒரு தமிழர்தான். நிதியமைச்சராக கூட ஒரு தமிழரை நியமித்து இருந்தார்கள். இந்த கடல் படை தளபதி முதலில் ஆசி பெற்றது மஹாநாயகே தேரரிடம். அவர் தான் ஆரம்பம் முதல் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியதாகவும், புலிகளின் 10 ஆயுதகப்பல்களை அளித்தது தானே என்றும் சொல்கிறார்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு