ஆறு மாதத்திற்கு ரெலோவிலிருந்து டெனீஸ்வரன் நீக்கம்


DSC_0732_mini-720x450கட்சியின் அடிப்படைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் ரெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

வவுனியாவில் கூடிய கட்சியின் மத்திய செயற்குழு இந்த முடிவை  நேற்றிரவு ( ஞாயிறு) இரவு 10.30 மணி அளவில் எடுத்துள்ளது.

கூட்டத்தின் இறுதியில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கட்சியின் கருத்தை அறியாமல் வடக்கு மாகாண முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டமை மற்றும் கட்சியின் ஒழுங்கை மீறியமை தொடர்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் ரெலோவின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளா

வரும் நாட்களில் டெனீஸ்வரன் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை ஒன்றை நடத்தி இறுதித் தீர்மானம் எடுக்கும் வரையில் அவரின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதாக அந்தக் கட்சியின் செயலாளர் எஸ் ஶ்ரீகாந்த தெரிவித்துள்ளாா்

உங்கள் கருத்து
 1. BC on August 23, 2017 1:24 pm

  பிரபாகரன் புகழ்பாடி பிழைப்பு நடத்தும் புலவர் டெனீஸ்வரன் அவரின் அடிப்படை உறுப்புரிமையை ரெலோவில் இருந்து ஆறு மாதங்களுக்கு நீக்கப்பட்டால் அவருக்கு பதிலாக ரெலோ தலைவரையும் ரெலோ ஊறுப்பினர்களையும் சுட்டு கொன்று ரயர் போட்டு எரித்த புலி தலைவரின் புலி இயக்கத்தின் புகழ்பாட ரெலோ இயக்கில் வேறு ஆட்களும் இருக்கிறார்களா?


 2. karuppan on August 26, 2017 4:38 pm

  பிரபாகரன் இகழ்பாடி பிழைப்பு நடத்தும் ஒருகூடடம் இருக்கும் போது புகழ்பாடி பிழைப்பு நடத்தும் கூடடம் இருப்பதில் தவறு என்ன?


 3. BC on September 4, 2017 3:11 pm

  தமிழ் அரசர்கள் காலத்தில் இருந்தே தமிழ்அரசர்களுக்கு புகழ் பாடி பிழைப்பு நடத்தும் கூட்டம் உருவாகியது.
  புலித்தலைவர் பிரபாகரன் காலத்தில் அவர் இதை தனக்கு சாதமாக பயன்படுத்தி தன்னை புகழ்பாடும் ஒரு கூட்டத்தை வேகமாக உருவாக்கினார்
  அவர்களுக்கு முக்கியமான உத்தரவு பிரபாகரன் இகழ்பாடினால் தலை இருக்காது.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு