தமிழ்நாட்டில் இணைந்தன ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள், துணை முதல்வராக பன்னீர்செல்வம்


201708211548424337_1_eps2._L_styvpfஅ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள் இன்று தலைமை அலுவலகத்தில் ஒன்றிணைந்தன. அணிகள் இணைப்புக்கு ஓபிஎஸ் தரப்பு தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளன. அதன்படி, கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு அமைக்கப்பட உள்ளது.

மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நிதித்துறை, வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மாபா பாண்டியராஜனுக்கு தொல்லியல்துறை, தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு கால்நடைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாலகிருஷ்ண ரெட்டிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்றுள்ளனா்.

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விரைவில் சசிகலாவை நீக்கப்படுவார்

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விரைவில் சசிகலாவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார். கடந்த 6 மாதங்களாக நீடித்து வந்த இழுபறிக்கு முடிவு கட்டும் வகையில் அதிமுகவின் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இணைந்தனர். பின்னர் கட்சியில் யாருக்கு என்னென்ன பொறுப்புக்கள் என்பதை முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து ஜெயாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி

அதிமுக இரு அணிகளும் இணைக்கப்பட்ட பிறகு, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.,ஐ தொடர்ந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். எம்.ஜி.ஆர்., நினைவிடம், அண்ணாதுரை நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு ஒன்றான இரு அணி நிர்வாகிகளும் கவர்னர் மாளிகை செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை பதவியேற்பு விழா நடக்க உள்ளது.

 

உங்கள் கருத்து
  1. BC on August 23, 2017 1:58 pm

    //அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள் இன்று தலைமை அலுவலகத்தில் ஒன்றிணைந்தன.//
    அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான ஓ.பி.எஸ். இ.பி.எஸ் எல்லாம் ஒரே அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் அவர்கள் ஒருவரை ஒருவர் பிரபாகரன் மாதிரி புலிகள் மாதிரி கொலைகள் செய்ய இல்லை
    இது எல்லாவற்றையும் விட மிக கேவலமானது அசிங்கமானது அருவருப்பானது புலிகளால் அழிக்கபட்ட ரெலோ புலிகளால் அரை உயிருடனும் ரயர் போட்டு எரிக்கபட்டு கொல்லபட்ட ரெலோ உறுப்பினர்களை கொண்ட ரெலோ இயக்கம் புலி பிரபாபகரன் காலில் விழுதல்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு