சீதனத் தொகையை அதிகரிக்குமாறு மாப்பிள்ளை வீட்டாா் கோரியதால் பெண் தற்கொலை


Dowry_Symbol_of_Womens_Injusticeதென்மராட்சியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் சீதனக் கொடுமையால் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

முன்பள்ளி ஆசிரியராகக் கடமையாற்றும்பெண்ணொருவருக்கு திருமணம் முற்றாகிய நிலையில், திடீரென சீதனத்தை அதிகரித்துத் தருமாறு மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்துள்ளதுடன், சீதனத்தை அதிகரித்துத் தந்தால்தான் திருமணம் நடக்கும் எனவும் எச்சரித்துச் சென்றுள்ளனர்.

குறித்த பெண்ணின் பெற்றோர் இருவரும் மரணமடைந்துள்ள நிலையில் குறித்த பெண் கொழும்பில் பணிபுரிகின்றார். இவரது சகோதரி தென்மராட்சியில் வசிக்கின்றார். தென்மராட்சியில் வசிக்கும் பெண்ணின் சகோதரியே திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

12 லட்சம் ரூபா சீதனம் என்று பேசி முடிவாகியிருந்தது. அதன் பின்னரே திருமண ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

திருமணத்துக்கான நாளும் குறிக்கப்பட்டு, மணப்பெண்ணுக்கான உடைகளும் வாங்கப்பட்ட நிலையில், நேற்று பெண்ணின் வீட்டிற்கு வருகை தந்த மாப்பிளை வீட்டினைச் சேர்ந்தவர்கள் 12 இலட்சம் சீதனம் போதாது. சீதனம் அதிகரிக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் இந்தத் திருமணம் நடைபெறாது எனத் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் இல்லாத குறித்த பெண்ணின் திருமணச் செலவுகள் அனைத்தையும் அவரது சகோதரியே ஏற்றுக்கொண்ட நிலையில், சீதனத் தொகை அதிகரித்தமையால் குறித்த பெண்ணின் சகோதரிக்கு மேலும் பணக் கஷ்ரம் ஏற்பட்ட நிலையில், குளியலறைக்குச் சென்ற மணப் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்து
 1. BC on August 28, 2017 11:02 am

  12 லட்சம் ரூபாவை ஓசியில் களவு எடுக்க முயற்ச்சித்த மாப்பிள்ளை வீட்டாரை காவல்துறையினர் கைது செய்து கடுமையான தண்டணை வழங்க வேண்டும்.


 2. Mohamed SR Nisthar on August 29, 2017 9:54 am

  Is there anyway to prosecute this “கையாலாகாத மாப்பிள்ளை” for manslaughter(2nd degree murder) under Sri Lankan Criminal law, even though it is reported a “suicide”.


 3. karuppan on September 3, 2017 7:34 am

  This is not the first suicide within Tamil community due to dowry problem. It is a great disgrace for Tamil community to continue with this brutal dowry and caste system. It is sad that the political, civil, religious leadership of Tamil community continue to keep silence on this matter. It is a violation of human rights and crime against humanity.


 4. BC on September 6, 2017 2:44 pm

  This is not the first suicide within Tamil community due to dowry problem.
  யாழ்பாணத்தில் நடக்கும் கொடூரமான சீதன பிரச்சனை பற்றி கதைக்கும் போதும் யாழ்பாணத்து எங்கட கறுப்புகாரர்களுக்கு தமிழே வராது. தெலுங்கு only தான்.
  இப்படியே நீங்கள் தெலுங்கு பேசுங்கோ யாழ்பாணம் சீதன கொடுமையால் நாசமா அழிச்சு போகட்டும்.


 5. paarathy on September 7, 2017 4:34 pm

  யாழ்பாணத்தில் நடக்கும் கொடூரமான சீதன பிரச்சனை பற்றி கதைக்கும் போதும் யாழ்பாணத்து எங்கட கறுப்புகாரர்களுக்கு தமிழே வராது.

  Is there anyway to prosecute this “கையாலாகாத மாப்பிள்ளை” for manslaughter(2nd degree murder) under Sri Lankan Criminal law, even though it is reported a “suicide”.

  மேலேயுள்ள கருது அன்பர் நிசார் சொன்னது 29 ஆவணி 17 இல். கருப்பன் சொன்னது புரட்டாதி மூன்றாம் திகதி. கருப்பன் சொன்னதும் வெள்ளை பீஸீ இருக்கு தமிழின் மீது அளவிலாத பற்று வந்து விட்ட்து. என்ன பற்று. மகிந்த பக்தன் அல்லவா?


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு