ஜனாதிபதியாக பொறுப்புற்றார் ரணில் . – போராட்டக்காரர்கள் திடீர் அமைதிக்கான காரணம் என்ன..?

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் , பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்த கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் இன்னும் முனைப்படைந்திருந்த நிலையில் பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. போராட்டக்காரர்கள் அதிரடியாக ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு மிகுந்த வன்முறைப்போக்குடன் கோட்டாபாயவை பதவியிறக்கினர்.

தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கவை பதவியியிலிருந்து அகற்றும் வரை போராட்டம் தொடரும் எனப்பட்டது. ஆனால் கோட்டாபாய பதவி விலகியதாக நேற்று அறிவித்ததுடன் போராட்டக்காரர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதுடன் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை என்பவற்றை இராணுவத்திடம் கையளித்திருந்தனர். இந்தநிலையில் சில கேள்விகள் குட்டகப்பட வேண்டியவை.

போராட்டக்காரரகளின் நோக்கம் என்ன என்பது இப்போது வரை புலப்படவே இல்லை. பொருளாதார காரணங்கள் தான் நோக்கம் எனின் கோட்டாபாயவை விரட்டி விட்டால் பொருளாதாரம் மீண்டு விடுமா..?

ரணில் தானே ராஜபக்ஷ அரசை பாதுகாக்க பிரதமராக பதவியேற்றார். அவருக்கு எதிராகவும் போராடப்போவதாக அறிவித்த போராட்டக்காரர்கள் இப்போது அமைதி காப்பது ஏன்..?

பொறுத்திருந்து பார்ப்போம். போராட்டக்காரர்கள் என்ன செய்ய போகிறார்கள்..? போராட்டத்தை முன்னெடுத்த இடதுசாரிய அமைப்புக்களின் மௌனத்தின் பின்னணியில் இருப்து என்ன..? நடப்பவை என்ன..?

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *