வடக்கில் சிங்கள ஆசிரியர்களின் வெற்றிடத்தை நிரப்ப அமைச்சரவை அங்கீகாரம்!


z_p09-Teacherவடமாகாணத்தில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் சிங்கள ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 30 வருட யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் பெரும் எண்ணிக்கையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. அதிலும் சிங்கள ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை அதிகமாகவுள்ளது.

இதற்குத் தீர்வாக வடமாகாணத்திலுள்ள சிங்கள பாடசாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்களுள், பூரண தகுதியுடைய ஆசிரியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருந்தார்.அதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு