இலங்கையில் தமிழ் நாளிதழ்களின் விற்பனை வீழ்ச்சி – மத்திய வங்கி புள்ளி விபரம்!


Kiosk sa dnevnim i nedeljnim novinama  foto Aleksandar Andjicஇலங்கையில் தமிழ் நாளிதழ்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், சிங்கள மற்றும் ஆங்கில வார மற்றும் நாழிதழ்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சமூக, பொருளாதார புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் தேசிய மட்டத்தில் வெளியாகும் இதழ்களின் 508.08 மில்லியன் பிரதிகள் 2015ஆம் ஆண்டு விற்பனையாகியிருந்தன. 2016ஆம் ஆண்டு, இது 538.82 மில்லியன் பிரதிகளாக அதிகரி்த்துள்ளது.

இது, உலகின் பல நாடுகளில் அண்மைக்காலமாக வீழ்ச்சியடைந்து வரும் அச்சு இதழ்களின் விற்பனைப் போக்கிற்கு எதிர்மாறானதாகும்.

உலகில் வளர்ச்சியடைந்துவரும் இணையம், சமூக ஊடகங்கள், டிஜிட்டல் தொலைக்காட்சி செயலிகள் போன்றவற்றின் அதிவேகப் பயன்பாட்டினால் நாளிதழ்களின் விற்பனை வீழ்ச்சியடைந்து வருகின்றது.

ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில், 2015ஆம் ஆண்டை விட 2016ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்ட நாளிதழ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி புள்ளிவிபரங்களின் அடிப்படையில், 2015ஆம் ஆண்டு. 383.13 மில்லியன் பிரதிகளாக இருந்த நாளிதழ்களின் விற்பனை, 2016ஆம் ஆண்டு 411.76 மில்லியன் பிரதிகளாக அதிகரித்துள்ளது.

சிங்கள, ஆங்கில நாளிதழ் மற்றும் வார இதழ்களின் விற்பனை அதிகரித்துள்ள போதிலும், தமிழ் நாளிதழ் மற்றும் வார இதழ்களின் விற்பனை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது என மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு