நல்லிணக்கத்திற்கான மைதிரியை பாராட்டிய அமெரிக்கா


315535108maithripala_sirisena1நாட்டினுள் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் மற்றும் ஜனநாயக மறுசீரமைப்புக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட செயற்பாடுகளுக்கான பெறுபேறுகள் தொடர்பில் அமெரிக்கா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் பதில் இராஜாங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போதே மேற்கண்ட விடயம் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், பல்வேறு விமர்சனங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள் வெற்றியளிக்க அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நீதி, நியாயம், இன ஒற்றுமை, அரசியலமைப்பு திருத்தம் போன்ற அனைத்து விடயங்களிலும் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக அமெரிக்கா நம்புகிறது எனவும் எலிஸ் வேல்ஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, நல்லிணக்க செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்லும் போது, பல்வேறு தடைகள் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

அரசியல் இலாபங்களுக்காக சில இனவாதிகள், மக்களை குழப்பும் நோக்கில், நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த முற்படுவதாகவும், ஆனால் தனது பயணப் பாதையை மாற்றப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு