நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தை சர்வதேசத்திற்கு காட்டிக்கொடுக்கமாட்டேன் – தலதா அத்துகோரள


2134208858Thalatha_Athukoralaநாட்டைப் பாதுகாத்த இராணுவத்தை ஒருபோதும் காட்டிக்கொடுக்கமாட்டேன் என இன்று நீதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இவரே சிறிலங்காவின் முதலாவது பெண் நீதியமைச்சருமாவார்.

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவிருந்த நிலையில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய, மைத்திரிபால சிறிசேனவினால் பதவி விலக்கப்பட்டார்.

இந்நிலையில் புதிய நீதியமைச்சராக தலதா அத்துகோரள பதவியேற்ற பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டை காப்பாற்ற ஒத்துழைப்பு வழங்கிய எந்தவொரு பாதுகாப்பு தரப்பினரும் சர்வதேச நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல அரசாங்கம் இடமளிக்காது. நாட்டின் சுயாதீன தன்மை பாதுகாக்கப்படும். நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்க இடமளிக்க மாட்டோம் என்றும்  அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு