இலங்கையில் இன்று முதல் பொலீதீன் தடை -மத்திய சுற்றாடல் அதிகாரசபை


இன்று முதல் தெரிவு செய்யப்பட்ட சில வகையான பொலிதீன் பயன்பாடு தடைக்கு வருவதாக ce en auபையின் தலைவர் கலாநிதி லால் மர்வின் தர்மசிறி கூறினார்.

சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டமாக இது நடைமுறைக்கு வருகின்றது என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும் இன்று முதல் பொலிதீன் தடை செய்யப்படும் என்ற போதிலும், வருகின்ற ஜனவரி மாதம் வரை அதனை நடைமுறைப்படுத்துவதில்லை என்று அதிகாரிகள் அறிவித்திருப்பதாக பொலிதீன் தயாரிப்பாளர்கள் மற்றும் மீள்சுழற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் அநுர விஜேதுங்க கூறினார்.

இதேவேளை பொலிதீன் பயன்பாட்டில் இருந்து விடுபடுவதற்காக போதுமான அளவு காலம் தேவைப்படும் என்று உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறினார்.

பொலிதீன் பயன்பாட்டை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் காலத்திற்கு தேவையானது என்று களனி பல்கலைக்கழகத்தின் நிலையான தீர்வுகள் மத்திய நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி யூ.பி.கே. ஏபா கூறினார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு