யாழ்ப்பாணத்தில் இந்திய மீனவர்கள் 76 பேர் விடுவிப்பு


248595502fish-Lஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறியில் ஈடுபட்டுவந்த இந்திய மீனவர்கள் 76 பேர்களை யாழ் பருத்தித்துறை, ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரின் அறிவூறுத்தலுக்கு இணங்க இவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

இதில் 68 இந்திய மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றிலும், 08 பேர்கள் பருத்தித்துறை நீதிமன்றிலும் ஆயராக்கி இவர்கள் விடுவிக்கப்பட்டதுடன் சுண்டிக்குழியில் அமைந்துள்ள இந்திய தூதரக இல்லத்தில் அதிகாரிகளிடம் நேற்று மாலை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இந்திய மீனவர்கள் தங்கட்சி மடம்,புதுச்சேரி, ஐகாதாப்பட்டிணம், இராமேஸ்வரம் ஆகிய பகுதியினை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மீனவர்கள் இரண்டு மாத காலத்தில் நெடுந்தீவு, ஊர்காவற்துறை, மாதகல், பருத்தித்துறை போன்ற பெரும் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுப்பட்டு வந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு