புதிய அரசியலமைப்புக்கு ஆதரவில்லையென சம்பந்தனிடம் தெரிவித்துவிட்டேன் – மகிந்த!


SAMPANATHAN-RAJAPAKSA-2013புதிய அரசியலமைப்புக்கு தான் ஆதரவளிக்கப்போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தெரிவித்துவிட்டதாக  முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த 29ஆம் நாள்முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், இரா.சம்பந்தனுக்குமிடையில் அரசியலமைப்புத் தொடர்பாக முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்புத் தொடர்பாக இரா.சம்பந்தன் தெரிவிக்கையில், தனக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றதெனவும், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்ததாகவும், தமிழர்கள் இணைந்து வரக்கூடிய இந்த அரிய வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என தான் மகிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்புத் தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பின் அவசியம் தொடர்பாகவும், அதில் எனது பங்களிப்புத் தொடர்பாகவும் இரா.சம்பந்தன் எடுத்துரைத்தார். நானும் அதிலுள்ள விடயங்கள் தொடர்பாக எடுத்துரைத்தேன்.

புதிய அரசியலமைப்பின் அவசியம் தற்போது இல்லையென நினைக்கின்றேன். என்மீதும் என்சார்ந்த கட்சி உறுப்பினர்கள், அஅமைச்சர்கள் மீது கெடுபிடிகளை விதித்து கைதுசெய்யும் அரசாங்கம் என்னிடமிருந்து ஆதரவை எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்.

எப்படியிருப்பினும் இந்த விடயம் தொடர்பாக என்னால் தனித்து முடிவெடுக்கமுடியாது. கட்சிக்காரர்களுடன் கதைத்துவிட்டே முடிவெடுக்கமுடியும்.

இருப்பினும், சம்பந்தன் எனது ஆட்சிக் காலத்தில் என்னுடன்மனம்விட்டுப் பேசியிருந்தால் எவ்வளவோ பிரச்சனைகள் தீர்ந்திருக்கும். இதை நான்அவரிடமே நேரில் தெரிவித்தேன் எனத் தெரிவித்தார்.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு