சுஷ்மாவை சந்தித்த ததேகூ


190534724in_slஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரான சுஷ்மா சுவராஜ நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் போது, தற்போதைய புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் இரா.சம்பந்தனால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருமத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமெனவும், இது தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படலாகாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், காலதாமதம் ஏற்படாத வகையில் அரசியலமைப்பு வரைவானது இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து உடனடியாக சர்வசன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டுமெனவும் சம்பந்தன் வலியுறுத்தினார்.

அத்துடன், இலங்கை அரசாங்கமானது இந்த நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்தக் கருமத்தினை நிறைவேற்றுவதை இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென, இரா.சம்பந்தன், சுஸ்மா சுவராஜிடம் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த இந்திய வௌிவிவகார அமைச்சர், தமது அரசாங்கத்தினது ஒத்துழைப்பை மீள் உறுதி செய்தார்.

இந்திய வௌிவிவகார அமைச்சருடனான சந்திப்பு குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு